Thursday, March 15, 2007

வாழைப்பழ ஊசி

சமீபத்தில் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் போது அந்நியன் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. கதை நாயகன் இரட்டை மனபாதிப்பில் செயல்படும் களம்தான் கதை. இதில் சொல்லவரும் கருத்து சுஜாதாவினுடைய கதை வசனம் மற்றும் நாயகன் பிராமணப்பையன் சமூகத்தின் சாதரண தவறுகளை கூட தாங்கமுடியாமல் செய்தவர் மீது எடுக்கும் நடவடிக்கை கொலைசெயதல் ஆக ஒரு தவறுக்கு மற்றொரு தவறு என்பதுதான் சட்டம் கூறும் ஆனால் மனு தர்மப்படி கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அமுராபி சட்டம் போல நியாயம் போலும். அவர்களின் கருத்து எந்த துறையில் இருந்தாலும் மனுநீதியை போற்றுவதில் காரியமாக இருப்பார்கள் ஆக தமிழர்கள் அதையும் மசாலா கலந்த திரைப்படத்தில் காட்டும்போது நாக்கு சப்புக்கொட்டி ஆஹா என்ன டெக்னிக்கலாகவும்,வேகமான திரைகாட்சியாகவும் சங்கர் எடுத்திருக்கிறார் என பாராட்டுவார்கள் எல்லாம் வாழைப்பழ ஊசி கணக்காய் பணத்தை இழந்து நேரம் இழந்து வெட்டியாக போனதுதான் மிச்சம் ஆனால் அந்த கருத்தியல் தரும் பாடம் இன்னும் எவ்வளவு ஏமாற தயாரா இருக்கம் என்பதுதான்.

2 comments:

Anonymous said...

பெயர்க்காரணம் என்னவோ ? லூக வா ? லூசா ? எனக்கு மெய்யாலுமே ஒன்னுமே பிரியல :))))) ஹி ஹி

சாலிசம்பர் said...

முக்கியமான விசயத்தை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.நன்றி.சங்கரின் படத்தை காசு கொடுத்து தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.